இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், வங்க கடலில் தமிழகத்தின் வடகடலோர பகுதிக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் தமிழக கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சில இடங்களில் கனமழையும் பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-01-10

