விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தமது சொந்த ஊரான அரியலூர் அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமது தாய், மற்றும் உறவினர்கள், கிராம பொதுமக்கள், மற்றும் கட்சி தொண்டர்களுடன் இணைந்து பொங்கலை கொண்டாடினார். . இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்படு செய்யப்பட்டு இருந்த்து. இதனை தொல்.திருமாவளவன் தாமே முன்னின்று நடத்தினார். மகளிருக்கான போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அங்கனூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பொங்கல் வைத்து அனைவருக்கும் விசிக தலைவர் தொல் திருமாவளவன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விவசாயத்தை பாதுகாக்க இந்த நாளில் சூளுரை ஏற்போம் என தெரிவித்தார்.
சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்து.

