மதுரை கிரானைட் விசாரணையில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழு பரிந்துரைகளை ஏற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். 2017-11-01
காலா படத்துக்கு தடைகோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், காப்புரிமை தொடர்பான வழக்கு என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது. 2017-11-01
டிடிவி தினகரன் ஆதரவு எம்பிக்கள் மூன்று பேரைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி, மாநிலங்களவைச் செயலாளர் தீபக் வர்மாவிடம், ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் மனு அளித்துள்ளனர். 2017-11-01
தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ; தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் 2017-11-01
தமிழகம், புதுச்சேரியில் தொடர்ந்து மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-31
புதுச்சேரியில் சொகுசு காரை பதிவு செய்து வரிஏய்ப்பு செய்த விவகாரத்தில் நடிகை அமலாபால் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். 2017-10-31
தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்கள் அருகே விளம்பரப் பலகைகள் வைக்க கூடாது ; சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு…. 2017-10-31
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில் இழுபறி நீடிப்பு ; அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பு…. 2017-10-31
திட்டமிட்டப்படி மதவாத சக்திகளுக்கு எதிராக வரும் 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் ; தமிழகம் முழுவதும் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவிப்பு…. 2017-10-31
சென்னை, திருவள்ளூர் உட்பட 9 கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….. 2017-10-31