தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-01
ஆர்.கே.நகரில் திமுக நிர்வாகிகள் 154 பேர் அவர்களின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018-01-01
இலங்கைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 69 பேர் காரைக்கால் துறைமுகம் வந்தடைந்தனர். 2018-01-01
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 9 ஆயிரத்து 860 கோடி ரூபாயில் வெறும் ஏழு சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாக காங்கிஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 2018-01-01
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 8பேர் உயிரிழப்பு; காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல் 2018-01-01
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்பு; ஜனநாயகத்தில் யாரும் கட்சி தொடங்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து 2018-01-01
அரசியலில் களமிறங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு; 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு 2018-01-01
இந்தியாவிலேயே கல்வித் துறையில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது தமிழகம்; எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் 2018-01-01
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் களைகட்டியது புத்தாண்டு; நாடு முழுவதும் பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம் 2018-01-01