வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். 2017-10-28
மத்திய அரசின் ஒப்புதலுடன் அரசு பள்ளிகளில் நவீன அறிவியல் ஆய்வு மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2017-10-28
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்த 10 கோடி ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு; தமிழ் மொழியின் வளம் உலகறியச் செய்ய வழிவகை ஏற்படும் என பெருமிதம் 2017-10-28
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி ; சோனியாகாந்தி நலமுடன் இருப்பதாக ராகுல் காந்தி தகவல் 2017-10-28
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் 2017-10-28
காவல்துறையினர் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது கொடூர தாக்குதல் ; பாஜகவை கண்டித்து, நவம்பர் 3-ம் தேதி கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அறிவிப்பு 2017-10-28
ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை கிலோ 25 ரூபாயாக உயர்வு ; விலை உயர்வு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவிப்பு 2017-10-28
வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. 2017-10-27
விளையாட்டு வீரர்களை பிராண்ட் மதிப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தும் ஃபோர்ப்ஸ் பட்டியலில், புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 7ஆவது இடம் பிடித்துள்ளார். 2017-10-27
இந்தோனேசியாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது. 2017-10-27