அரசியலில் ஈடுபடுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள நடிகர் கமலஹாசன், தமிழகம் முழுவதும் சுற்றி வந்து மக்களை சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். 2017-11-08
தேசிய புலனாய்வு அமைப்பு, ஜம்மு-காஷ்மீரில், 36 கோடி ரூபாய் மதிப்பிலான, பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளது. 2017-11-08
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் நாட்டைப் பீடித்திருந்த கருப்புப் பண நோய் குணப்படுத்தப்பட்டுள்ளது ; மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி திட்டவட்டம்…. 2017-11-08
கனமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது மதுராந்தகம் ஏரி ; கிளியாற்றின் கரையோரத்தில் உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. 2017-11-08
இமாசலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது ; நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்…. 2017-11-08
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணை ; தினகரன் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், ஈபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் எடுத்துவைக்கப்படும் என தகவல்…. 2017-11-08
பணமதிப்பு நீக்கத்துக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் இன்று கண்டன கூட்டம் ; கட்சியினர் திரளாக பங்கேற்க எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அழைப்பு…. 2017-11-08
தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 2017-11-07
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. 2017-11-07