பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை 8ம் தேதி கூடுகிறது; முதல் முறையாக டிடிவி தினகரன் சட்டப்பேரவையில் பங்குகொள்கிறார்… 2017-12-28
ஒகி புயல் குறித்து மத்திய குழுவினர் இன்று கன்னியாகுமரியில் ஆய்வு; புயல் பாதிப்புக்கு இடைக்கால நிதியுதவியாக 133 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு… 2017-12-28
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-27
ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலியைக் காட்டிலும், ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவதாக இந்திய அணி தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் சந்தீப் பட்டீல் கூறியுள்ளார். 2017-12-27
வெளிநாட்டவருக்கான ஹெச் 1 பி விசா வழங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. 2017-12-27
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை மாலுமிகளாக கொண்ட கப்பல் மூழ்கி விட்டதாக டிடிவி தினகரனின் ஆதரவாளரான புகழேந்தி தெரிவித்துள்ளார். 2017-12-27
பாகிஸ்தானில் குல்பூஷன்ஜாதவைச் சந்திக்கச் சென்ற அவரது மனைவியின் தாலி மற்றும் வளையல்களை அகற்றச் சொன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. 2017-12-27
இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ஜெய்ராம் தாக்கூர்; பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதாக தகவல்….. 2017-12-27
டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன்; ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டது தொடர்பாக விளக்கமளிக்க உத்தரவு… 2017-12-27
முதலமைச்சர், துணை முதலமைச்சர் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி கடுமையான வார்த்தைகளால் விமர்சித்ததால் பெரும் சர்ச்சை; ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு படித்த முட்டாள் என அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்… 2017-12-27