உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை குறித்து உச்சநீதிமன்ற முழு அமர்வுதான் முடிவு செய்ய வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 2018-02-03
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு அதிகமாக சரிவைச் சந்தித்தது… சென்செக்ஸ் புள்ளிகளின் வீழ்ச்சி மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மீதான நம்பிக்கையின்மையை காட்டுவதாக ராகுல்காந்தி விமர்சனம்… 2018-02-03
உலகளவில் ரசிகர்களை ஒன்றிணைக்க விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளத்தை தொடங்கினார் நடிகர் விஜய்… தீவிர அரசியலில் களமிறங்குவாரா என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு; 2018-02-03
சென்னை கொளத்தூர் நகைக்கடையில் நாதுராம் கொள்ளையடித்த நகைகளில் ஒன்றரை கிலோ மீட்பு…பெங்களூருவில் விற்கப்பட்டுள்ள தங்க நகைகளை மீட்க காவல்துறை தீவிரம்; 2018-02-03
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 30க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து சேதம்… கோவில் வளாகத்தில் கடைகள் வைக்க அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் போராட்டம்; 2018-02-03
அக்டோபர் மாதம் 2ம் தேதி அமலாகிறது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம்… மத்திய அரசு அறிவிப்பு; 2018-02-03
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 2018-02-02
நேட்டோ அமைப்பின் செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. 2018-02-02
போர் முடிவுற்ற நிலையிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியமாக வாழக்கூடிய சூழல் நாட்டில் உருவாகவில்லை என்று அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 2018-02-02