5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல், வேட்பாளர்கள் ரூ.14,000 கோடி செலவு

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிசோரம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இங்கு வேட்பாளர்கள் செய்த செலவு தொடர்பாக சி.எம்.எஸ். என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. அதில், 5 மாநிலத் தேர்தலில், ஒட்டுமொத்தமாக 14 ஆயிரம் கோடி ரூபாயை வேட்பாளர்கள் செலவு செய்திருப்பதாகவும், அதிகபட்சமாக தெலுங்கானாவில் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *