ஜிகா வைரஸ் பரவுவதால், தங்கள் நாட்டு கர்ப்பிணிகள் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அறிவுறுத்தல்

ஜிகா வைரஸ் தாக்கக் கூடும் என்பதால் தங்கள் நாட்டு கர்ப்பிணிகள் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க நோய்கள் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ராஜஸ்தான், குஜராத், பீகார், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜிகா வைரஸ் பரவி வருகிறது. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தான் 153 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் எதிரொலியாக அமெரிக்க சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் நோய்கள் தடுப்பு மையமானது, கர்ப்பிணிகள் இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம், குறிப்பாக ராஜஸ்தானுக்கு பயணிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. ஜிகா வைரசால், தாய் பாதிக்கப்பட்டால் பிரசவத்தின் போது தீவிர பிரச்சனைகளை உண்டாக்கி விடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *