ரபேல் ஒப்பந்தத்தில் விசாரணை கோரிய வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று காலை தீர்ப்பு

ரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில்  இன்று காலை 10 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. ரபேல் போர் விமானங்களுக்கு விலை நிர்ணயம் செய்ததில் தொடங்கி, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.

ரபேல் ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை  தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி சீலிடப்பட்ட கவரில் ரபேல் விலை விவரங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், ரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *