சென்னை எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்வை நாய் இறைச்சி இல்லை – ஆட்டு இறைச்சி என்று ஆய்வில் தகவல்

இராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் கைப்பற்றப்பட்ட இறைச்சி ஆட்டிறைச்சி தான் என அதை ஆய்வு செய்த சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி தெரிவித்துள்ளது.

இராஜஸ்தானின் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்த ரயிலில் கொண்டுவரப்பட்ட இரண்டாயிரம் கிலோ இறைச்சியை நவம்பர் 17ஆம் நாள் உணவுப் பாதுகாப்புத் துறை, மாநகராட்சி சுகாதாரத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த இறைச்சி முறையாகப் பதப்படுத்தப்படவில்லை என்றும், இதன் ஏற்றுமதியாளரும் இறக்குமதியாளரும் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *