கனடாவில் 90 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய பயணிகள் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1888ல் மாகாஸா என்ற ஏரியில் 39 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அந்தக் கப்பல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பலில் இருந்த 16 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் மீதமுள்ளோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்தக் கப்பலின் சிதிலமடைந்த பாகங்கள் கடலாய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கப்பலுக்குள் முழுமையாக சைக்கிள் மற்றும் கார் ஒன்று இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கப்பலில் உள்ள பொருட்களை மீட்க கடல் ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

