டெல்லியில் இரண்டு தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதால் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்

டெல்லியில் இரண்டு தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதால் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

அமிர்தசரஸ் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நிராங்காரி பிரார்த்தனை கூடத்தில் கையெறி குண்டுகளை வீசியதில் 3 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் கண்காணிப்பு கேமராவை கொண்டு ஆராய்ந்த போலீசார் அந்த  இரண்டு தீவிரவாதிகள் ஜெய்ஷே முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர்.

அந்த இருவரும் டெல்லிக்கு தப்பிச் சென்று விட்டதாக கருதப்படுகிறது. இதனால் டெல்லியின் அனைத்து எல்லைப்பகுதிகளிலும் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  நகரின் பல இடங்களில் அந்த இருவரின் படங்களுடன் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *