ஒடிசாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். கட்டாக் புறநகர்ப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மகாநதி ஆற்றுப் பாலத்தில் இருந்து விழுந்தது.
இந்த விபத்தில் பேருந்து சுக்கல் சுக்கலாக நூறாக நொறுங்கியது. இதில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். ஆற்றில் தண்ணீர் இருந்திருந்தால் பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

