கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்துத் தரப்பினரும் மனமுவந்து உதவி செய்திட வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து டிவிஎஸ் குழுமம் சார்பில் அதன் நிறுவனர் வேணு சீனிவாசன் முதலமைச்சரை நேரில் சந்தித்து கஜா புயல் நிவாரண நிதியாக 2 கோடி ரூபாயை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சக்தி மசாலா குழுமங்களின் சார்பில் அதன் மேலாண் இயக்கநர் துரைசாமி புயல் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாயை முதலமைச்சரிடம் வழங்கினார்.
இதேபோன்று சிட்டி யூனியன் வங்கி சார்பில் ஒரு கோடி ரூபாய் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளது.

