புயலால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கடன்களை தள்ளி வைக்க வேண்டும்: தமிழிசை வேண்டுகோள்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வாங்கிய வங்கி கடன்களை கட்டுவதற்கு சிறிது காலம் தள்ளி வைக்க வேண்டும் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழிசை, தமிழக பாஜக சார்பில் ஐவர் குழு அமைக்கப்பட்டு, கஜா புயல் பாதிப்பு குறித்து அறி்க்கை ஒன்று தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

புயல் பாதிப்பில் அரசியல் கட்சியினர் அரசியல் செய்யாமல் களத்தில் இறங்கி பணி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். புயல் பாதிப்புகளை விஞ்ஞான ரீதியில் ஆய்ந்து, மறு கட்டுமானத்தை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *