டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்ப்பொடி வீச்சு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்ப்பொடி வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அறை அருகே அவர் மீது மர்ம நபர் மிளகாய்ப் பொடியை வீசியதாகக் கூறப்படுகிறது. இது முதலமைச்சரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் முக்கிய குறைபாடாக கருதப்படுகிறது. மிளகாய்ப் பொடியை வீசிய நபரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *