தமிழகத்தில் உள்ள டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசின் சார்பிலோ, தமிழக அரசின் சார்பிலோ எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு அதிகளவு நிதி வழங்கி, மத்திய அரசு உதவ வேண்டும் என்று வலியுறுத்திய திருநாவுக்கரசர், ராகுல்காந்தி விரைவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்பார் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *