இமாச்சலப் பிரதேசத்தில் சாலைகளை ஆக்கிரமித்துள்ள பனிக்கட்டிகள்

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு துவங்கியுள்ளது. குல்லு மாவட்டத்தின் சோலங்க் பள்ளத்தாக்கு பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், அங்குள்ள சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளன.

வீடுகளின் கூரைகளும், சுற்றுப்புற பகுதிகளிலும் பனியால் சூழப்பட்டுள்ள நிலையில்,  மரம், செடி கொடிகள் மீது பனிப்படர்ந்துள்ளது. பனிப்பொழிவால், குளிர் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். பனியால் பள்ளத்தாக்கு முழுவதும் பஞ்சு படர்ந்துள்ளதுபோல ரம்மியமாக காட்சியளிப்பதால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *