டி.டி.வி. தினகரன் நிழல் யுத்தம் நடத்தி வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பேரிடர் காலங்களில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்த பேரிடர் உதவிப்படை என்ற அமைப்பினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று கலைவாணர் அரங்கத்தில் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் தேவர் ஜெயந்தி அன்று தேவர் மற்றும் ஜெயலலிதாவின் பேனர்கள் கிழிக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும், ஜெயலலிதா இல்லாததால் தினகரன் இவ்வாறு தைரியமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
ஸ்டாலின் தினகரன் இடையேயான உறவு காலத்தினால் கட்டவிழ்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

