நெல்லை அருகே கார், இருசக்கர வாகனம், லாரி ஆகியவை அடுத்தடுத்து மோதிய விபத்தில் பெண் உட்பட மூவர் பலி

நெல்லை அருகே கார், இருசக்கர வாகனம், லாரி ஆகியவை அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த பேச்சியம்மாள், காரில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

காரை அதே பகுதியைச் சேர்ந்த பாப்புலர் என்பவர் ஓட்டிவந்துள்ளார். நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வந்த போது, சிறுமளஞ்சி பகுதியைச் சேர்ந்த ஈசாக் என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மோதிய கார், சாலை தடுப்பை தாண்டி கவிழ்ந்தது.

அப்போது அவ்வழியாக வந்த லாரியும் கார் மீது மோதிக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஈசாக் , காரில் வந்த பேச்சியம்மாள், ஓட்டுனர் பாப்புலர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *