வாட்ஸ் ஆப் பயனர்களின் ஸ்டேட்டஸ்-களில் விளம்பரங்கள்

பயனர்களின் ஸ்டேட்டஸ்-களில் விளம்பரங்களை இடம்பெறச் செய்யும் திட்டத்தை அமல்படுத்த வாட்ஸ் ஆப் தயாராகி வருகிறது.

வாட்ஸ் ஆப்புக்கு உலகம் முழுவதும் 150 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஃபேஸ்புக்கின் கைக்கு வாட்ஸ் ஆப் சென்ற பின் பல்வேறு மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நிறுவனத்தின் பொருளாதார ரீதியிலான மாற்றமாக, விளம்பரம் மூலம் வருவாய் ஈட்ட வாட்ஸ் ஆப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பயனர்களின் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்களை இடம்பெறச் செய்யும் திட்டப் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதனை, அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் கிரிஸ் டேனியல்ஸ் உறுதி செய்துள்ளார். ஆனால் இது எப்போது முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று விவரங்கள் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *