2019 ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
மருத்துவச் சேர்க்கை நுழைவுத் தேர்வான நீட்டை, இதுவரை சி.பி.எஸ்.இ நடத்தி வந்த நிலையில், இனிவரும் காலங்களில் NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்தவுள்ளது. அடுத்த ஆண்டில் மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்க, பிளஸ் டூ படிக்கும் அல்லது படித்து முடித்த மாணவர்கள் இன்று முதல் தேசிய தேர்வு முகமையின் www.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
நவம்பர் 30ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். வழக்கம்போல் 10-க்கும் மேற்பட்ட மாநில மொழிகளிலும் வினாத்தாள் வழங்கப்படவுள்ளது. தமிழ் மொழியிலும் வினாத்தாள் வழங்கப்படும். தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜூன் 5ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நாள் – 2019, மே 5
இணையதளம் – www.nta.ac.in
விண்ணப்பிக்க கடைசி நாள் – நவ.30
தேர்வு முடிவுகள் – ஜூன் 5

