கர்நாடக அரசியலில் பரபரப்பு….. தேர்தலுக்கு 48 மணி நேரமே உள்ள நிலையில் காங்கிரசில் இணைந்தார் பாஜக வேட்பாளர்

கர்நாடக மாநிலம் ராம்நகரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காங்கிரசில் இணைந்துள்ளார். இடைத்தேர்தலுக்கு 48 மணி நேரமே உள்ள நிலையில் பாஜக வேட்பாளர் சந்திரசேகர் காங்கிரசில் இணைந்தார். பாஜக வேட்பாளர் சந்திரசேகர் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனக்கு ஆதரவு கோரி பாஜகவில் எந்த தலைவரும் பிரச்சாரம் செய்யவில்லை என சந்திரசேகர் புகார் தெரிவித்துள்ளார்.

பாஜக வேட்பாளர் கட்சி தாவியதையடுத்து ராம்நகரில் காங்கிரசின் கூட்டணி கட்சியான மஜத ராம்நகரில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் ராம்நகரில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் 3 மக்களவை மற்றும் 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவ.3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *