தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற இருந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதை கண்டித்து, மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கண்காணிப்புக் குழுக் கூட்டம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தவிர்க்க இயலாத காரணத்தால் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

