தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைப்பு

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார். சென்னை ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்துக்கு 1 கோடி ரூபாய் மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகளை தொடங்கிவைத்த அவர், மதுரை அன்னை சத்தியா குழந்தைகள் காப்பகத்தில் 8 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தருமபுரி பஞ்சப்பள்ளி சிறுவர்கள் இல்லத்துக்கு 3 கோடியே 65 லட்சத் செலவில் புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டியதுடன், மதுரை மாட்டுத்தாவணி கனிகள் விற்பனைக் கூடத்தில் 21 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளைத் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *