இந்தோனேசியாவில் விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவன போயிங் 737 ரக விமானம் கடலில் விழுந்த விபத்தில் அதில் இருந்த 189 பேரும் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
கடலில் மிதந்த சில பயணிகளின் உடலும், உடமையும் மீட்கப்பட்ட நிலையில், கறுப்புப் பெட்டியைத் தேடும் பணி நடந்தது. இந்த நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் கடலுக்கு அடியில் இருந்து விமானத்தின் கறுப்புப் பெட்டியை மீட்டுள்ளனர். கருப்பு பெட்டி ஆய்வு செய்யப்பட்டு விபத்திற்கான காரணம் வெளியிடப்படும்.

