சிபிஐ டிஎஸ்பி தேவேந்தர் குமாருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இறைச்சி ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர் மொயின் குரேசி மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 2கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, டிஎஸ்பி தேவேந்தர் குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தேவேந்தர் குமாரை ஜாமீனில் விடுக்கக் கோரி அவர் சார்பில் டெல்லி பாட்டியாலா அவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் ஜாமீன் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாகவும் தேவேந்தர் குமார் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து ஐம்பதாயிரம் ரூபாய் சொந்தப் பிணையும், அதே தொகைக்கு மற்றொருவரின் உத்தரவாதம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு தேவேந்தர் குமாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

