இளைஞர் – திருநங்கை திருமணத்தை பதிவு செய்ய மறுத்த கோவில் நிர்வாக அதிகாரிகள்

தூத்துக்குடியில் இளைஞருக்கும், திருநங்கைக்கும் நடந்த திருமணத்தை சிவன் கோவில் நிர்வாக அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த ரயில்வே ஒப்பந்த ஊழியரான அருண்குமாரும், வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் பி.ஏ. படித்துவரும் ஸ்ரீஜா என்ற திருநங்கையும் காதலித்துள்ளனர். இதையடுத்து, பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் சிவன் கோவிலில் திருமணம் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தம்பதிகள் கோவிலுக்கு வந்தபோது, அவர்களது திருமணத்தை பதிவு செய்ய முடியாது என கோவில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திருமணம் செய்தபின்னர், நீதிமன்றத்தை அணுகி, சான்றிதழ் பெற அறிவுறுத்தினர். இதையடுத்து, திருநங்கைக்கும் – இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *