பெண் பத்திரிகையாளருக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் எம்.ஜே.அக்பர்

பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளருக்கு எதிராக தான் தொடர்ந்த அவதூறு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

மீ டூ இயக்கத்தின் அடிப்படையில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மீது பெண்கள் பாலியல் புகார் கூறி வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் பத்திரிகை ஆசிரியராக இருந்த போது தவறாக நடந்துகொண்டதாக பல்வேறு பெண்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து பதவியில் இருந்து விலகிய எம்.ஜே.அக்பர், தனக்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்த பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது டெல்லி நீதிமன்றம் ஒன்றில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *