பள்ளிக்கல்வித்துறைக்கென தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புஞ்சை துறையம்பாளையத்தில் துணை மின் நிலையத்தை அவர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், புதிய சேனலில், பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்று தெரிவித்தார்.

