மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றவனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருமங்கலம் பாரதி முதல் தெருவில் பெங்களூரூவைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவன் வசித்து வந்தான். அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவரை ஆபிரகாம் கடத்திச் சென்று பாலியக் தொல்லை கொடுக்க முயன்றுள்ளான்.
சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு வந்த அருகிலிருந்தோர் சிறுமியை மீட்டனர். மேலும் ஆபிரகாமை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

