தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு 6 பேர் பலி

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு 4 பேர் பலியாகியுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளில் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வில்லாபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதே போன்று, பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த கமுதியை சேர்ந்த மூக்கம்மாள் என்ற பெண்ணும் உயிரிழந்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கபட்ட 2 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. திருப்பூர் பெரியப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் 2 மாத பெண் குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்ட பெண் குழந்தை சில மணி நேரத்திலேயே உயிரிழந்தது. பன்றிக் காய்ச்சல் பாதிப்புடன் 4 பேரும், அறிகுறிகளுடன் 12 பேர் உட்பட 79 பேர் காய்ச்சலுக்காகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *