தகுதிநீக்கம் செய்யப்பட்ட MLA-க்கள் 18 பேரின் விடுதி அறைகளுக்கு சீல்வைப்பு

சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18எம்.எல்.ஏக்களின் விடுதி அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

234 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் வகையில் சேப்பாக்கத்தில்  விடுதி இயங்கி வருகிறது. இந்த நிலையில், 18எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டு செப்டம்பரில் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டு இருந்தார்.

இதுதொடர்பான வழக்கில், 18 பேரின் தகுதி நீக்கம் சரி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து எம்.எல்.ஏ விடுதியில் உள்ள 18 பேரின் அறைகளையும் சட்டபேரவை செயலகம் சார்பில் மூடி சீல் வைக்கப்பட்டது.இனி இந்த அறை இச்செயலகம் வசம் எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும் அனுமதியின்றி யாரும் திறக்க கூடாது என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *