நேபாளப் பிரதமர் சர்மா ஒலி மருத்துவமனையில் அனுமதி

நேபாளப் பிரதமர் சர்மா ஒலி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சளி மற்றும் இருமல் தொல்லையால் அவர் நேற்று முன் தினம் முதல் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக இதய பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் மகராஜ்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள மன்மோகன் இதய நோய் சிகிச்சை மையத்தில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *