ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடியில் சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சித்திவிநாயகம் தமது குடும்பத்துடன் காரில் ராமேஸ்வரத்துக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியுள்ளார்.
குயவன்குடி அருகே வந்தபோது எதிரே வந்த வடமாநில சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 4 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

