விஜய் நடித்த சர்கார் படத்திற்கு ரெட் கார்டு தடை விதிக்கக் கோரி, குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் என்பவர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள மனுவில், விவசாயிகளின் பிரச்சனை மற்றும் தற்கொலையை மையமாக வைத்து, தாம் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதையை திருடி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படத்தை இயக்கியதாக தெரிவித்துள்ளார். இது குறித்த வழக்கு தஞ்சை குற்றவியல் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருவதால், தமது ஒட்டுமொத்த வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்பு ராஜசேகர் வேதனை தெரிவித்துள்ளார்.
எனவே தமக்கு நியாயம் கிடைக்கும் வரை, ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இயக்கியுள்ள சர்கார் படத்திற்கு ரெட் கார்டு தடை விதிக்க வேண்டும் என, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம், குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் மனு அளித்துள்ளார்.

