உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக நீதிமன்றத்துக்கு செல்லவில்லை என்றும்,தேர்தலை விதிமுறைப்படி நடத்தவே நீதிமன்றம் சென்றதாகவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் திருக்கடையூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் நடத்த திமுக தடையாக இருப்பதாக தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

