அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனக்கசப்பை மறந்து மீண்டும் இணைய வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை தொண்டர்கள் கொண்டாடி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
நீர் அடித்து நீர் விலகுவதில்லை என்பதற்கு ஏற்ப கருத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. மனக்கசப்பாலும், சில தவறான வழிநடத்தலாலும் மாற்றுப் பாதையில் பயணிக்கச் சென்றவர்கள், உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு மீண்டும் கட்சிப் பணியாற்ற வருமாறு இருவரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

