ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாதது ஏன்? என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்றார். ரபேல் திட்டத்துக்காக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 30ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளுக்கு ஒப்பந்தத்தை மத்திய அரசு வழங்கியதாக அவர் கூறினார்.
தனியார் நிறுவனங்களுக்கு சலுகை காட்டும் மத்திய அரசு ராணுவ வீரர்களின் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்தியிருக்கலாம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

