அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை செயல்படுத்த விரைவில், ஒப்பந்த புள்ளிகள் கோரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடியை சந்திக்கும் போதெல்லாம் மீனவர்களின் பிரச்சனையை எடுத்து வைப்பதாக கூறியுள்ளார். தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு மூலம் துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளதாகவும், செல்லும் இடமெல்லாம் அரசுக்கு அமோக ஆதரவு இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

