தென்மேற்கு வங்கக் கடலில் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்குப் பருவமழை துவங்குவதில் காலதாமதமாவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவையில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் 3 சென்டிமீட்டரும், பாம்பன், மயிலாடுதுறை, சீர்காழியில் தலா 1 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

