டெல்லி தமிழ்க் கல்விச் சங்கத்தின் பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழாவை முதலமைச்சர் தொடங்கிவைப்பு

டெல்லியில் உள்ள தமிழ்க் கல்விச் சங்கத்தின் பள்ளியில், ஜெயலலிதா பெயரில் அமையும் கட்டிடத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். டெல்லியில் மயூர் விஹாரில் உள்ள தமிழ்க் கல்விச் சங்கப் பள்ளியில் கட்டப்படும் இந்தக் கட்டிடத்துக்கு, தமிழக அரசு 5 கோடி ரூபாய் வழங்குகிறது.

 

புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். டெல்லியில் தமிழக அரசின் சார்பில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *