இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதிமுக எதிர்கொள்ளும்-முதலமைச்சர்

18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளதாகக் வரவேற்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 20 தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், சால்வை அணிவித்தும் அங்கிருந்த அ.தி.மு.க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதே போல் கட்சி அலுவலகம் முன்பு திரண்டிருந்த அ.தி.மு.க தொண்டர்கள் அமைச்சர்கள், உயர்மட்ட நிர்வாகிகளுக்கு இனிப்புகளை ஊட்டி மகிழ்நதனர்.

இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் புடைசூழ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 18 எம்எல்ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில், நல்ல மற்றும் சிறந்த தீர்ப்பு வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஏற்கெனவே தயாராக இருப்பதாகவும், 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தீர்ப்பு என்பது மேலும் ஒரு அனுபவம் என டிடிவி தினகரன் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அப்படி என்ன அனுபவத்தை அவர் பெற்றார் என்று தெரியவில்லை என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *