இந்தோனேஷியப் பெண்ணுக்கு விமானத்தில் சென்ற போது பிரசவ வலி ஏற்பட்டதால் விமானம் மும்பையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
எதிகாட் நிறுவனத்துக்குச் சொந்தமான E Y 474 என்ற விமானம் நேற்று அபுதாபியில் இருந்து ஜகார்த்தாவுக்குச் சென்று கொண்டிருந்தது. அதில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த நிறைமாதக் கர்ப்பிணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.
நடுவானில் சென்ற போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மும்பையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து அந்தேரி மருத்துவமனையில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.

