மீ டூ விவகாரத்தில் சிக்கியுள்ள வைரமுத்துவும், குற்றஞ்சாட்டிய பாடகி சின்மயியும் முறைப்படி புகார் அளிக்கவோ, வழக்கு தொடரவோ முன்வர வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மீ டூ விவகாரத்தை, யாரும் தவறாக பயன்படுத்திவிடக் கூடாது என்பதே தமது கவலை என்றும் குறிப்பிட்டார்.

