ரன்வீர்ஷா, கிரண் ராவ் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட சிலைகளை கும்பகோணம் நீதிமன்ற அலுவலர்கள் கணக்கெடுப்பு செய்து வருகின்றனர். ரன்வீர்ஷா, கிரண் ராவ் ஆகியோரின் இடங்களில் சோதனை நடத்திய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், 247 சிலைகளை கைப்பற்றினர்.
இவை கிண்டியில் உள்ள சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கும்பகோணம் சிலைக்கடத்தல் தடுப்பு நீதிமன்ற அலுவலர்கள் கணக்கெடுப்பு செய்து வருகின்றனர். சிலைகள் தொடர்பான பட்டியலின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
இந்த கணக்கெடுப்புப் பணி வீடியோ காட்சியாகவும் எடுக்கப்பட்டு வருகிறது. இவை கும்பகோணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இதனிடையே ரன்வீர்ஷா, கிரண்ராவ் ஆகியோரின் ஊழியர்கள் 12 பேருக்கு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். இதையடுத்து இவர்களின் ஊழியரான தீனதயாளன் என்பவர் நேற்று ஆஜரான நிலையில், கிரண்ராவின் மேலாளரான செந்தில் என்பவர் இன்று ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

