அமெரிக்காவின் சான்-டியேகோ வன உயிரியல் பூங்காவில், யானைக் குட்டிகள் நடைபயிலத் தொடங்கும் அழகிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
2003-ம் ஆண்டு ஸ்வாஸிலேண்ட் வனப்பகுதியில் இருந்து, யானைகள் மீட்டுக் கொண்டுவரப்பட்டு வன உயிரினப் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு பிறந்து சில வாரங்களே ஆன குட்டி யானைகள் உணவு வைக்கப்பட்டுள்ள பெட்டியை நகர்த்த முடியாமல் திணறுவதை பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும், நடைபயிலத் தொடங்கும் குட்டி யானைகள், நடக்க நடக்க தடுமாறி விழும் காட்சிகளையும், பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

