வங்கக் கடலில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை 3.57 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. வீடுகள் குலுங்கியதால் பீதி அடைந்த மக்கள் தூக்க கலக்கத்தில் வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். எனினும் நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
2018-10-10

